*/ மனிதனும் தெய்வமாகலாம் ~ Shreevidyalayam

மனிதனும் தெய்வமாகலாம்


 



2.அற்புதங்கள்

  நிறைந்த புனிதப் பயணம்





நாம் அனைவரும் புது புது அனுபவங்களைப் பெறப் பல பயணங்கள் செல்கின்றோம்.  அதிலும் புனித யாத்திரை  மேற்கொள்ளும் வழக்கமும் இருந்து வருகிறது.  இந்த பயணத்திற்குப் பணமும் பொருளும் தேவைப்படுகிறது. நாம் நாடு கடந்து பயணம் செய்ய  வேண்டும் எனில் எத்தனையோ நடைமுறை  சிக்கல்களைச் சந்திக்கின்றோம்.  இங்கு வெளியுலகில் நாம் மேற்கொள்ளும் பயணங்களில் நாம் முழுமையைப் பெற முடியாமல் அந்த பயணத்தின் முடிவிலே அடுத்தடுத்த பயணத்திற்கான  திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாயத்தில் நாம் எல்லா மனிதர்களும் எந்த வித பணமும் பொருளும் இல்லாமல்    செல்லக்கூடிய அற்புதமான ஓர் புனிதப் பயணத்தைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம். இது எல்லா மனிதர்களும் அவசியம்  செல்ல வேண்டிய  எளிமையான புனித யாத்திரை ஆகும். 

 

 

யோக சாஸ்திரம் உள் முக பயணத்திற்கான வழிமுறைகளை மனிதனுக்குக் கற்பிக்கிறது. எல்லா மத நூல்களும் ஆத்ம பயணம் என்று இதையே போதிக்கின்றது. இந்த மனிதப்பிறவி  நம்  சுயத்தை  மறக்கடிக்கச் செய்துவிட்டது. சத்தியத்தை உணரவும், சுயத்தை உணரவும் நாம் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.


 

உண்மையில் எங்கும் நிறைந்திருக்கும் சத்தியத்தை உணர எந்த பயணமும் அவசியமில்லை.ஆனால் நாம்  மாயையின் பிடியில் சிக்கி  பொய்மையான மாய  உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.. இந்த மாயத் திரைகள் விலக நாம் உள்நிலை பயணம் மேற்கொள்ள வேண்டிருக்கிறது. நம் சுய இருப்பிடத்தை அடைய இந்த யாத்திரை அவசியமாகிறது. ஆம் , துன்பங்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து மீண்டும் அருள் நிறைந்த ஆனந்த உலகை அடைய ஒவ்வொரு மனிதனும் இந்த புனித யாத்திரை செல்ல வேண்டும். 

 

        இங்கு உருவாகியிருக்கும் எல்லா  மதங்களும் மனிதப் பிறவி                     எடுத்த  ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சென்றடைய                     வேண்டிய யாத்திரை என்று பூமியில் பல இடங்களை ஒவ்வொரு             மதமும் பல விதங்களில் வலியுறுத்துகின்றனர். இங்கு                                   உருவாகியிருக்கும் எல்லா  மதங்களும் மனிதப் பிறவி எடுத்த                   ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சென்றடைய வேண்டிய               யாத்திரை என்று பூமியில் பல இடங்களை ஒவ்வொரு மதமும் பல           விதங்களில் வலியுறுத்துகின்றனர். இந்து மதம் பல வகையான               புனித யாத்திரை வலியுறுத்துகிறது. அதில்  மிகப் பிரசித்தமான               சொல்லப்படுவது காசி, கயா யாத்திரை, கைலாஷ்,  மானசரோவர்         யாத்திரை, 108 திவ்ய தேசங்கள், கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரை           போன்ற யாத்திரைகள் ஆகும்.




 வெளி சூழ்நிலையில் எந்த யாத்திரையும் செல்லாமலே இந்த உள்நிலை பயணம் மனிதனுக்குச் சாத்தியமாகக் கூடியது. உடல், மணம், உணர்வு கடந்து ஆத்ம நிலையை அடையும் போது. இந்த புனித இடங்களைத் தரிசிக்காமலே இந்த புனிதத்தையும் முழுமையும் உள் முக பயணத்தில் உணர முடியும். தான். எப்போது அதை நாம் கண்களால் போன்றுமுடியும்.உண்மை என்று கூறும் மனிதர்களும் அவர்களின் அனுபவத்தில் உணர்ந்த பிறகே அங்கு நிலைப்பெற முடிகிறது.சககரங்களை இழந்து விடுவோம் என்று அஞ்சுகிறோம். 

 

யோகத்தை நான்கு பகுதியாகப் பிரிக்கலாம். கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கரியா யோகம் என்பதாகும். கர்ம யோகம் உடல் மூலம் சில சேவைகளைச் செய்து  அதன் மூலம் ஆத்ம நிலையை அடைவதற்கு வழி செய்யும்.  பக்தி யோகம் என்பது  பக்தி என்னும் உணர்ச்சி மூலம் ஆத்ம நிலையை அடைவதாகும். க்ரியா யோகம் என்பது சில  சாதனப் பயிற்சிகள் மூலம் ஆத்ம  நிலையை அடைவதாகும். இந்த முறைகளை யோகிகள் மேற்கொள்ளும் முறையாகும். 

 

 

எல்லா மனிதர்களும் தங்கள் மதம் குறிப்பிடும் இந்த யாத்திரையை எப்படியாவது தங்கள் வாழ்நாளில்  சென்றடையப் பல பிரயத்தனம். மேற்கொண்டு முழுமை அடைவதில்லை. ஆம், தற்காலிகமாக  சில காலம் முழுமை பெற்றதாக இருக்கும். பின் வேறொரு சூழலில்  மீண்டும் அடுத்த யாத்திரையைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

 

 

 

இந்து மதத்தில் அத்வைத குரு ஆதி சங்கரர் காசி பஞ்சகம் என்ற நூலில் ஆத்மாவைக் காசி க்ஷேத்திரம் என்று  வர்ணிக்கிறார். ஒரு மனிதன் தன் உள்நிலையில் ஆத்ம நிலையைச் சென்றடைவதையே காசி யாத்திரை என்று காசி பஞ்சகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் எந்த மனிதன் உள்நிலையில் காசி க்ஷேத்திரம்  அடைந்து ஆத்ம தரிசனம் மேற்கொள்கிறானோ  அந்த மனிதனின் உடல் காசி க்ஷேத்திரத்தின் புனிதத்தைப் பெறுவதாக சங்கரர் கூறுகிறார்.  வெளி சூழ்நிலையில் மேற்கொள்ளும் யாத்திரை காட்டிலும் மனிதன் உள்நிலையில் மேற்கொள்ளும் யாத்திரையேப் பிரதானம் என்று கூறியிருக்கிறார்.

 

 

 

மனிதப் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்ம நிலையை அடைந்து அந்த புனிதத் தன்மையைப் பெற்று  ஞானத்தையும் ஆனந்தத்தையும் அனுபவம் செய்ய வேண்டியே காசி யாத்திரைக்கு இந்து மதத்தில் பிரதான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  காசிக்ஷேத்திரங்கள்  மட்டுமில்லை  ஒவ்வொரு புனித யாத்திரைகளும் உள்நிலையில் நாம் ஆத்ம  நிலையை  தரிசிப்பதையே  மறைமுகமாக  கூறப்படுகிறது.

 


வைணவர்கள் 108  திவ்ய தேசங்களை தரிசித்து அதன் முடிவில் வைகுண்டத்தைஅடைவதைப்  பிரசித்தமாகக் கூறுகின்றனர்  ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட விஷ்ணு ஸ்தலங்களையே  108 திவ்ய தேசங்கள் ஆகும். ஆழ்வார்களின் ஞானத்தை அனுபவம் செய்வதன் மூலம்  மனிதன் உள்நிலையில் அனைத்து சக்கரங்களைக் கடந்து வைகுண்ட பதவி அடைவதையே  குறிப்பிட்டிருக்க வேண்டும்.  சொர்க்கம்,வைகுண்டம்  என்ற  நிலைகளை  மனிதன் தன் உள்நிலையில்  உணர வேண்டியே   இ வை   வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்து மதத்தில் மட்டுமல்லாமல் மற்ற மதங்களிலும் வெவ்வெரு பெயர்களில் யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். சீக்கியர்கள் குருத்வாரா, குருநானக் யாத்திரை, சமனர்கள் நவாரு யாத்திரை,  சார் தான் யாத்திரை,ஹிமாலய யாத்திரை என்று சொல்லப்பட்டிருக்கிறது இவை அனைத்துமே பெயர்களில் வெவ்வேரு விதமாக அந்தந்த மதங்களில் பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்  எல்லா மதமும்  உள்நிலையில் மனிதன் ஆத்ம நிலையை அடைவதையே மோட்சம் நிலை என்று கூறப்படுகிறது. 


நாம் சிற்றறிவின் கொண்டு பார்த்து இவை வெளியில் மனிதன் கட்டாயம் செல்ல வேண்டிய யாத்திரை என்று புரிந்து கொண்டோம். 

 

 

நீங்கள் இதைப் படிக்கும் போது அந்த புனிதத்தலத்தின் சிறப்புகளை மத நூல்கள் எத்தனையோ வர்ணிக்கப்பட்டிருக்கிறதே, வெளியில் அந்த இடம் ஏன் உருவாக்கப்பட்டிருக்கிறது? எது உண்மை?என்று சந்தேகம் எழலாம். 

 

ஆம். அந்த ஸ்தலங்கள் சிறப்புகள் வாய்ந்த இடம் தான்.. அந்த இடங்களின் தெய்வீக சக்திகள் பொதிந்துள்ள  ஸ்தலங்கள் தான். மனிதன் கண்டிப்பாகச்  செல்லக்கூடிய  யாத்திரைகள் தாள். உண்மையில்  வெளியில் நாம் அந்த இடங்களைத் தரிசனம் செய்யும் போது உள்நிலையில் அந்த இடத்தை அடைய முடியும் என்பதற்காகவே  இப்படி மத நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.  ஆனால் நாம் இங்கு வெளி சூழ்நிலையில் சுகங்களை அனுபவிக்க  இந்த யாத்திரை  சென்று. கொண்டிருக்கும் போது எப்படி நாம் உள்நிலையில் அதை உணர முடியும்?

  

 

உள் நிலையில் எந்த கவனமுமின்றி நாம் மேற்கொள்ளும் எந்த யாத்திரைக்கும் பலன் இல்லை. அதில் முழுமையும் அடைய முடியாது. இங்கு உள்நிலை பயணம் எல்லாம்  பலருக்கு முட்டாள்களின் கற்பனை என்று கூட தோன்றக்கூடும். ஒன்று இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் எனில் ஐம்புலன்களால் அதைஉணர வேண்டும். உதாரணமாக  இணையதளங்களைக்  கண்டுபிடிப்பதற்கு முன்  நாம் இருக்கும் இடத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பதெல்லாம் நமக்குக் கற்பனை தான். எப்போது அதை நாம் கண்களால்  பார்த்து உபயோகம் செய்யும் போது நாம் இதை  உண்மை என்று உணர்கிறோம். அதுபோலவே இதை நாம் முயலாமலே எப்படி கற்பனை என்று முடிவு செய்ய முடியும். மனிதர்கள் மனம், உணர்வுகள் கடந்து செல்லும் போது தான் இதை உணர முடியும். இது அறிவியல் போன்று  வெளியில் நிரூபணம் செய்ய இயலாது அனுபவத்தில் மட்டும் தான் உணர முடியும். இதை இன்று உண்மை என்று கூறும் மனிதர்களும் இதை அனுபவம் செய்வதற்கு முன் கற்பனையாக தான் இருந்திருக்கும். அவர்களின் அனுபவத்தில் உணர்ந்த பிறகே அங்கு நிலைப்பெற முடிகிறது.

 

 இங்கு உள்நிலை பயணம் என்றால் பலரும் மனதில் எழும் எண்ணங்கள் என்று கருதி மனதிலே  சுழல்கிறார்கள். அது அமைதியின்மையையே உருவாக்கும். மகிழ்ச்சியற்ற  நிலையில் தான் இருக்க  முடியும். இதற்கு அஞ்சியே  பலர் இதற்கு முயல்வதும் இல்லை. ஆனால் இங்குச் சொல்லப்படும் ஆத்ம பயணம் மனதைக் கடந்து செல்லக் கூடிய உள்நிலை பயணமாகும். 

 

 

இந்த பயணத்தில் எது உண்மையோ அதைத் தான் அனுபவம் செய்வோம். இதில் எந்த மாயங்களும் இல்லை தான் ஆனால்  இந்த உடலில் நாம் மேற்கொள்ளும் போது  மனம் இதை அனுபவம் செய்யப்படும் போது அற்புதங்கள் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில் இந்த உண்மைகள் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாகும். 

 

 

இதை மனிதர்கள் முயலாமல்  இருப்பதற்கு  மனிதர்களுக்கு வெளி சூழ்நிலையின் மேல் இருக்கும் பற்றும் மோகமும்  தான்  காரணமாகுநாம் இங்கு வெளி சூழ்நிலையைப்  பற்றிக்  கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். அந்த சூழ்நிலையை  மாற்றுவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். வெளி சூழ்நிலை சுகங்களை இழந்து விடுவோம் என்று அஞ்சுகிறோம். உள் முக பயணத்திற்கு நம் மனம் மிகப் பெரிய தடையாக இருந்து வருகிறது. 

 

 

உண்மையில் நாம் உள்நிலையில் இருக்கும் இடத்தைப் பொருட்டே நாம் சந்திக்கும்  வெளி சூழ்நிலை  அமைக்கப்படுகிறது.  நாம் உள்நிலையில்  கவனம் செலுத்தும் போது இதை மிக நன்றாகவே  கையாள முடியும். 

 

 மனிதர்களின் வெளி சூழ்நிலைகள் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்களின் கர்மேந்திரியப்படி  வெவ்வேறாகத் தான் அமையும்.  மனிதர்கள் வெளியில் செய்யும் செயல்கள்  ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எந்த ஒரு விதிகளும் இல்லை . ஆனால் இதை மனிதர்கள் இன்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. 

 

 

நம் ஆன்மாவால்  வெளி சூழ்நிலை  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது அந்த சூழ்நிலையை எதிர் கொள்ள அருளும் உதவியும் கிடைக்கும் இதுவே நாம்  விழிப்படையாமல்  உறக்கத்திலிருந்து அணுகும்போது அந்த சூழ்நிலையால். பல கர்ம முட்டைகளை உருவாக்குவதோடு துன்பம், வலி  போன்ற நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இனியாவது நாம் வெளிசூழ்நிலையைப் பற்றி  கவலைப்படாமல் உள்சூழ்நிலையில் நமக்குரிய  கடமையைச்  செயலாற்ற வேண்டும்..நமக்கு தேவையான அமைதியும் மகிழ்ச்சியும் நமக்கு அங்கு கிடைக்கும் போது நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிமையாகிவிடும்.

 

 நாம் உள்நிலையில் விழிப்புணர்வுடன் இருந்தால்  வெளி சூழ்நிலை  எத்தகைய கடினமாக  இருந்தாலும்  உள்நிலையில் நம்மால் அமைதியாக இருக்க முடியும். 

 

 அமைதியை வலியுறுத்திய புத்தரின் வாழ்வில் நாம்  கற்க முடியும்.,வெளி சூழ்நிலையில்  எத்தனையோ  வெற்றிகளையும்சாதனைகளையும், பொருளையும், சொத்துகளைக்  குவித்த பின்னும் அவரால் முழுமை அடைய  முடியவில்லை. அவரால் உள்நிலையில் எந்த  மகிழ்ச்சியும் உணர முடியவில்லை. அவரது உள் முக பயணமே அவருக்குப்  பேரமைதியும் ஆனந்தத்தையும்  கொடுத்தது.  தியானமே அவரது முழுமை உணர்வுக்கு வழி செய்தது. 

 

அதற்காக நாமும் புத்தரைப் போன்று காட்டிற்குச் சென்று  தவம் செய்ய அவசியமில்லை. நாம் வெளி சூழ்நிலையைத்  துறக்காமலே  நம்மால் உள்நிலையில்  ஆத்ம நிலையை அடைய  முடியும்.

 

 

யோக சாத்திரமும், மகான்களும் எளிமையான வழிமுறைகள் கற்பித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். புத்தரும் எத்தனையோ  எளிய முறையில் போதித்து இருக்கிறார். ஆனால் நாம் தான் நம் வாழ்க்கை சூழ்நிலையோடு போராடுவதன் தீவிரத்தில்  இதையெல்லாம் அறிந்துகொள்ள  நேரமின்றி இருக்கின்றோம்

 

 

இன்றைய காலத்திற்கு ஏற்ப நம்முடைய இந்த உள்நிலை பயணத்திற்கு எளிமையான வழிமுறைகளைப்  பல  ஞானிகளும் யோகிகளும்  வழிகாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.   

 

 

யோகத்தின் வழியாக எல்லா மனிதர்களும் இந்த உள் முக பயணம் மேற்கொள்வது எளிமையாகச் சாத்தியப்படும். யோகா என்றால் பலரும் இதை ஏதோ உடலை வைத்துச் செய்யும் உடற்பயிற்சி என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் யோகா என்பதன் உண்மையான பொருள் ஒன்றினைதல் ஆகும்.  நம் உள்நிலையில்  உடல், மனம், உணர்வுகள், ஆத்ம சக்தியோடு ஒன்றிணைந்து  பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றினைதலே யோகமாகும். 

 

 

யோகாசனம் என்பது உடல், மனம், உணர்ச்சி நிலைகளை  ஒழுங்குப்படுத்தி  நம் உள்நிலையில் விழிப்புணர்வுடன் கவனம் பெறச்செய்யும்  ஓர் அறிவியல் தொழில் நுட்பமாகும்.  ஆசனங்கள் மட்டும் யோகத்தைக் குறிப்பிடப்படவில்லை. 

 

 ஞான யோகம் என்பது புத்தியைக் கொண்டு ஆத்ம நிலையை அடைவதாகும். இந்த முறையை எல்லா மனிதனாலும் ஆத்ம நிலையை அடைய முடியும். 

 

 

ஒரு மனிதனுக்கு எல்லா பகுதி யோகமும்  கலந்து தான் அவர்கள் வாழ்வு அமைகிறது. ஆனால் எந்த யோகமும் ஞான யோகமின்றி முழுமை பெற முடியாது. எல்லா மனிதர்களும் கர்ம யோகத்தில் பயணித்துக் கொண்டு  தான் இருக்கின்றனர். ஆனால்  ஞானத்தின் பற்றாக்குறையால்  ஆத்ம நிலையை அடைவதில்லை. பல கர்ம மூட்டைகளைச் சம்பாதித்து மீண்டும் மீண்டும் அதே கர்ம சுழற்சியில்  சுழல்கின்றனர்.

 

 

கர்ம யோகமும் பக்தி யோகமும் ஞான யோகமின்றி  செல்லும் போது ஆத்ம நிலையை உணர முடியவே முடியாது. இது தான் இன்றைய மனிதர்களின் நிலையாகும் .நாம் விழிப்புணர்வாய் உணர ஞான யோகத்தில் பயணம் செய்தே ஆக வேண்டும். ஞான யோகத்தோடு கர்ம யோகத்தில் ஈடுப்ப்படும்போது மிக எளிமையாக கர்மத்தில் இருந்து விடுதலை அடைய முடியும்.

 

 இன்றைய  சூழ்நிலையில் ஞான யோகத்தின் மூலம் மட்டுமே நம் எல்லோராலும்  மிக எளிமையாக உள்முக புனித யாத்திரை மூலம் ஆத்ம தரிசனம் பெற்று புனிதமடைய முடியும்.

 

 

மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வெளிமுகமான வாழ்க்கையே உள்நிலையில் நாம் செயல்ப்படுவதற்காக மட்டுமே கொடுக்கபடுகிறது  என்பதை  நாம் உணர வேண்டும்.

 

 

இந்த அத்தியாயத்தில் அற்புதமான புனித யாத்திரையை அறிந்தோம் மேலும்  அடுத்தடுத்த அத்தியாயத்தில் ஆத்மா தரிசனம் பெரும் வழிமுறைகளை பார்ப்போம்.




No comments:

Post a Comment