*/ விழித்தெழு மனிதா விழித்தெழு !!! ~ Shreevidyalayam

விழித்தெழு மனிதா விழித்தெழு !!!


 விழிப்புணர்வின்  எழுச்சி  குரல் - 2










விழிந்தெமு மனிதா விழித்தெழு 

நல்லதோர் உலகம் படைத்திட 

விழித்தெழு  மனிதா 

விழித்தெழூ மனிதா விழித்தெழு  !!! 


உன் கண்ணெதிரே திரையிடும 

அதர்மங்களைக்   கண்டு 

தர்மங்களைக்  காக்க வழிதேடும்  

தர்மவாளனே 

உன் விழிப்புணர்வே 

தர்மத்தைக் காக்கும் 

என்று உணர்வாயோ? 


விழித்தெழு மனிதா விழித்தெடு 

தர்மத்தை நிலைநிறுத்திட 

விழித்தெழு மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 


முடிவில்லாமல். தொடரும் 

சமுதாய் வன் முறைகள் 

நீ விழிப்படைய 

கடவுள் அரங்கேற்றும் நாடகம் 

என்று உணர்வாமோ ?


விழித்தெழு மனிதா விழித்தெழு

வன்முறைகளில்லா 

சமுதாயம் படைத்திட

விழித்தெழு மனிதா

விழித்தெழு  மனிதா விழுத்தெழு !!! 


பாலின வன்கொடுமைகளை 

தடுக்க வழிதெரியாது  

தவிக்கும்  பேதைகளே  

உனது அறியாமையை அகற்ற

இறைவன் கற்ப்பிக்கும் பாடம்

என்று உணர்வாமோ ?


விழித்தெழு  மனிதா விழித்தெழு 

அகிலத்தில் நல்லறம் காத்திட

விழித்தெழு.மணிநா 

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 


நடமாடும் அரக்கனை ஒழிக்க 

நீதித் தேடும் 

நீதிமான்களே

உனக்குள் மறைந்திருக்கும் 

அகங்காரத்தை அழிக்க 

ஈஸ்வரனால் படைக்கபட்ட மாயை 

என்று உணர்வாயோ ?


விழித்தெழு மனிதா வழித்ததமு 

தேவருலகம் படைத்திட 

விழித்தெழு  மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தைமு !!!


தீர்வுகளில்லா தொடரும்  

அநீதிகளை நிறுத்த 

இறைவணை  தஞ்சமடையும்

பக்திமான்களே

மெய்யறிவை உணர்ந்திட

படைப்பாளரின்  மெய்கல்வியிது 

என்று உணர்வாயோ? 


விழித்தெழு மனிதா விழித்தெழு 

வையத்தில் ஞானத்தை

நிலைநிறுந்த 

விழித்தெழு மனிதா

விழித்தெழு  மனிதா விழித்தெழு  !!! 


தினம் தினம் செய்தியில் திரையிடும்

குற்றங்களை  படித்து  

அரசியல் பேசும் பண்டிதர்களே 

இது உன் அதங்காரத்தை நீக்க

பரம்பொருள் நடத்தும்

மாய லீலை

என்று உணர்வாய்? 


விழித்தெழு மனிதா விழித்தெடி 

புவனத்தில் அமைதியை  நிலைநிறுத்த 

விழித்தெழு மனிதா 

விழித்தெழு  மனிதா விழித்தெழு  !!! 



மனித உருவில் நடமாடும்

மிருகங்களை சீர்திருத்த 

வழிதேடும் சீர்திருத்தவாதிகளே

மனிதனின் ஆறாம் அறிவை விழித்தெழ

இறை சக்தி  நடத்தும்  காவியம்

என்று உணர்வாயோ? 


விழித்தெழு மனிநா  விழித்தெழு

பூமியில் மனிதத்தை நிலைநிறுத்த 

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 


தீர்க்க வழி தெரியாத

மத கலவரங்களை

பார்த்துக் கொந்தளிக்கும்

பக்திமான்களே

உன் மத பற்றை நீக்கி. 

ஆன்மீகத்தின் மெய்ப்பொருள் 

உணர்த்த

கடவுள் அரங்கேற்றும் யுத்தம்

என்று உணர்வாயோ ? 


விழித்தெழு மனிதா விழித்தெழு

புவியில் ஆன்மீகத்தை நிலைநிறுத்த

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 


கண்ணாடியில் பிம்பமாய் 

பிரதிபலிக்கும் 

நம் தோற்றத்தின் அலங்கோலத்தை

நம் உடையையும் உடலையும் 

ஒழுங்குபடுத்தி 

கண்ணாடியில் பிரதிபலிக்கும்

நம் பிம்பத்தை 

சீர்செய்வதுப்போல் நம்  உள் முகமாய் 

அகத்தை ஒழுங்குப்படுத்தி

பூளோ கத்தின்  அலங்கோலத்தை 

விழிப்புணர்வால் மட்டுமே

சீர் செய்ய இயலும்

என்பதே 

எங்கும் நிறைந்திருக்கும்

பர பிரம்மத்தின்

மெய் தத்துவம்மென்று  உணர்வாயோ ?


விழித்தெழு மனிதா விழித்தெழு

படைத்தலின்  பரஞானத்தில் 

பிரபஞ்சம் இயங்கிட வழிசெய்து

அறியாமையிலிருந்து

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா  விழித்தெழு  !!! 




No comments:

Post a Comment