*/ விழித்தெழு மனிதா விழித்தெழு !!! ~ Shreevidyalayam

விழித்தெழு மனிதா விழித்தெழு !!!


 



விழிப்புணர்வின் எழுச்சிக்   குரல்  -1







விழித்தெழு
மனிதா விழித்தெழு 

உன் உறக்கத்திலிருந்து

விழித்தெழு மனிதா

விழித்தெழு  மனிதா விழித்தெழு !!! 



இரயில் பயணத்தை 

அனுபவம் செய்யாது

துயிலிலே 

பயனத்தின் இறுதியை

நோக்கிப் பயணிக்கும் 

பயணியைப் போல் 

உன் வாழ்க்கைப் பயணமும் 

துயிலிலே 

கழிந்துக்கொண்டிருக்கிறதென்று 

அறிவாயோ? 



விழித்தெழு மனிதா விழித்தெழு 

இருப்பில் வாழ்ந்திட  

துயிலிலிருந்து,

விழித்தெழு மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 



விழித்தால்  மட்டுமே உணர்வாய் 

இதுவரை நீ கண்ட காட்சிகள்

உன் சொப்பனமென்று 


 

விழித்தெழு மனிதா விழித்தெழு 

உன் சொப்பனத்திலிருந்து 

விழித்தெழு மனிதா

விழித்தெழு  மனிதா விழித்தெழு !!! 



விழித்தால் மட்டுமே உணர்வாய் 

இதுவரை நித் திரையில் 

நீ தரித் த வேடம் பொய்யென்று



விழித்தெழு மனிதா விழித்தெழ

சுயத்தை உணர  

தூக்கத்திலிருந்து

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!!  



விழித்தால் மட்டும் நிறுத்தப்படும் 

கற்பனையில் நீ படைக்கும்

நாடக காவியங்கள்



விழித்தெழு மனிதா விழித்தெழு

விழிப்பாய் உன் வாழ்க்கை 

கவிதையை படைத்திட 

விழித்தெழு மனிதா  

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 



விழித்தால் மட்டும் உணர்வாய் 

புயலும் சூறாவளியும் 

இடையிராத  

வாழ்க்கை பயணமிதென்று 

 


விழித்தெழு மனிதா விழித்தெழு 

இருப்பின்

அமைதியையும், ஆனந்த்தையும் உணர  

விழித்தெழு மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 



விழித்தால் மட்டுமே உணர்வாய் 

பயணத்தை தொடங்குவதற்கு முன்பே 

உன் பயணக்காட்சிகள் 

முடிவானது போல் 

உன் வாழ்க்கைப் பயணக் காட்சிகளும் 

பயணத்தின் முன்பே 

படைக்கபட்டடதென்று 



விழித்தெழு மனிதா விழித்தெழு

உண்மைகள் உணர்ந்திட

விழித்தெழு மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 


விழித்தால் மட்டுமே உணர்வாய்

பயணிக்கையில் சாளரத்தின் வழியே

நீ பார்க்கும் காட்சிகளை

மாற்றயியலாது

வேடிக்கை பார்ப்பது போல

உன் வாழ்க்கை பயணக் காட்சிகளை

 வேடிக்கை பார்ப்பதே 

கடமையென்று



விழித்தெழு மனிதா விழித்தெழு

பார்வையாளனாய்  வாழ்தலே

விடுதலையின்  இரகசியம்  

என்றுணர்ந்திட 

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!! 



விழித்தால் மட்டுமே உணர்வாய்

உன் பிறப்பின் நோக்கம்  

யாதென்று



விழித்தெழு மனிதா விழித்தெழு

முடிவில்லா தொடரும்

மாய பயணத்திலிருந்து

விடுதலை  பெறுதலே

உன் பிறப்பின் நோக்கம். 

என்று உணர்வாயோ? 



விழித்தெழு மனிதா விழித்தெழு

நீ படைத்த மாய உலகிலிருந்து

விழித்தெழு மனிதா

விழித்தெழு மனிதா விழித்தெழு  !!!! 



விழித்தெழு மனிதா விழித்தெழு

பொய்மையிலிருந்து மெய்மையை 

அனுபவம் செய்திட

விழித்தெழு மனிதா 

விழித்தெழு மனிதா விழித்தெழு !!!


No comments:

Post a Comment