*/ மனிதனும் தெய்வமாகலாம் ~ Shreevidyalayam

மனிதனும் தெய்வமாகலாம்


      


3.   மறைந்திருக்கும் உண்மைகள் 

               





                      எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
                      மெய்ப்பொருள் காண்பது அறிவு.


பூமியில் நாம் பார்க்கும் அனைத்திலும் உண்மை தன்மை அறிய மெய்ப்பொருள் தன்மையிலிருந்து காண வேண்டும் என்பது வள்ளுவரின் வாக்கு. மெய்ப்பொருள் என்பது பரம்பொருளான இறைவனைக் குறிக்கிறது. எதனிலும் உண்மை தன்மை அறிய மனதின் வழி பார்க்காமல் படைத்தவனின் இருப்பிலிருந்து பார்க்கும்போது அதன் உண்மை தன்மை அறிய இயலும்.


திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று குறிப்பிடுவது பரம்பொருளான படைத்தலுக்கு ஆதாரமாய் இருக்கும் இறைவனைக் குறிப்பிடுகிறார்.நாம் பல சமயங்களில் இதை தவறாகவே பொருள்படுத்திக்கொள்கின்றோம். மெய்ப்பொருள் அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்களை நாம் இந்த பொருளில் படிக்கும் போது அதன் உண்மைப் பொருளை அறிய முடியும்.


இந்த உலகை நாம் உருவாக்கிய மனம் கொண்டு பார்க்கும் பொழுது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை அறிய முடிவதில்லை.இதுவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நாம் உணராது இருப்பதன் காரணமாகும்.


நாம் உள்முக பயணம் மேற்கொள்ளாமல் இருக்க பலவற்றின் உண்மை தன்மையை அறியாதிருப்பதே காரணமாகும் .மனிதன் உண்மை தன்மை அறிய முயலாமல் இருப்பதற்கு காரணம்  இறைவனை பற்றி புரிந்து வைத்திருக்கும் கருத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது.மத பற்றால் நமக்குள் இருக்கும் உண்மையான பரம்பொருளை அறிய முற்படாமல் இறைவனை நமது தவறான அபிப்ராயங்களால் வெளியேத் தேடிக்கொண்டிருக்கின்றோம்.


வயதான மூதாட்டி ஒருவர் கையில் ஊசியை வைத்துக்கொண்டிருப்பதை உணராது வீடு முழுக்க தேடிக்கொண்டிருந்தாராம். அதுபோலவே   நாம் நம் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் இறைவனை அறியாமல் வெளியே தேடிக்கொண்டு இருக்கின்றோம்.


அறியாமையே உண்மைகள் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது. அறியாமை வளர காரணமாய் இருப்பவற்றைக் கண்டறிந்து அந்தத் திரைகளை நீக்க வேண்டும்.



மனிதர்கள் கினற்றுத் தவளைப் போல் மதம் என்ற எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .ஆன்மீகப் பெருங்கடலில் நீந்த மதப்பற்றைத் துறந்து அறியாமையால் கட்டமைத்த எல்லைகளைத் தகர்த்து வெளியே வர வேண்டும்.இங்கு மதத்தை துறக்க வேண்டும் என்று கூறுவது மனதில் இருந்து துறக்க வேண்டுமே தவிர வெளியில் துறக்கப்பட வேண்டியதைப்பற்றி கூறவில்லை.



மனதிலிருந்து மதத்தை நீக்குவதற்கு வெளியில் நாம் எந்த செயல்முறையான இறை வழிபாட்டையோ, கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை .நாம் மனதில் மாற்றத்தைகொண்டு வரும்போது வெளியில் பின்பற்ற வேண்டியதைப் பற்றி நாம் சிந்த்திக்கவே தேவையில்லை.



இறைவனை உணர்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட மதம் மனிதர்களின் மத பற்றால் இறைவனை உணர்வதற்கு  தடையாக  மாறிவிட்டதுபூமியில் பல தேசங்களில் பல விதமான மதங்களை மனிதர்கள் பின்பற்றி வருகின்றனர்.பூமியில் பிறக்கும் மனிதர்கள் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை உணர்ந்த  மகான்களும்,யோகிகளும் ஞானிகளும் தங்களின் ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கொள்கைகளையும் , தத்துவங்களையும், வாழ்வியல் முறைகளையும் வடிவமைத்தனர் . மனிதனுக்கு எளிமையான செயல்முறையை வழங்குவதற்காகப் பல வழிமுறைகள் அளிக்கப்பட்டன, அது ஒவ்வொரு கொள்கைகளும் தத்துவங்களில் வெளியில் சில வேறுபாடுகள் இருந்தாலும் அணைத்து மதத்தின் சாரமும் ஒன்றே என்பதனை உணராது போனதால் அது வெளியில் பல வேற்றுமைகளையம் பிரிவினைகளையும் தோற்றுவித்துவிட்டது.



இறைவன் இல்லை என்று கூறும் மதங்கள் கூட மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தியை கடவுளாக பாவித்த கொள்கைகளும் தத்துவங்களும் அமைந்திருக்கின்றன. அதாவது மனித உடல் ,மனம் அப்பாற்பட்ட வேறு ஏதோ ஒன்றை மறைமுகமாக இறைவன் என்று குறிப்பிடுகின்றனர் . இயற்கை மட்டுமே கடவுள் ,ஆத்மா மட்டுமே கடவுள் என்று பல விதங்களில் ஏதோ ஒன்றை கடவுள் எனக் கூறப்படுகின்றது.



எல்லா மதமும் ஒரே கடவுள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றது அதை மனிதன் உணர்வதற்கு வழிக்காட்டவே ஏற்படுத்தப்பட்டது.ஆனால் அதன் தத்துவங்களின் உண்மை தன்மை அறியாது போனதால் பூமியில் பல பிரிவினைகளும் மதக்கலவரங்களும் நடந்தேறுகின்றன.மனிதன் விழித்தால் மட்டுமே இந்த சூழ்நிலை மாறும்.எல்லா மதமும் ஆத்மா ஞானம் வழங்குவதற்காகவே ஏற்பட்டது என்பதனை உணர வேண்டும் .



கல்லூரியில் சேர்ந்து உயர்கல்விப் படிக்கப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சிப்  பெற வேண்டும். அதற்கு பல வகையான பள்ளிக் கல்வி முறைகள் அமைந்திருக்கின்றன.நாம் எதை தேர்ந்தெடுத்துச் சென்றாலும் நம்மால் கல்லூரியில் சேர இயலும்.அது போலவே நாம் எந்த மதத்தின் கல்வி பயின்றாலும் நம்மால் விழிப்படைய முடியும்.



இந்து மதம் , முகலாய மதம்,கிருத்துவ மதம்,புத்த மதம் ,சமண மதம்,சீக்கிய மதம் என்று மேலும் பல மதங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது .இதன் பாடத்திட்டங்கள் மாறுபட்டாலும் அதன் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கின்றது.



பல வகையான கல்வி முறைகள் இருந்தாலும் ஒரு கல்வி முறை அனைவராலும் போற்றத்தக்கவையாக   இருப்பது போல் இந்து மதம் பெரும் பகுதி மக்களால் போற்றப்பட்டு பின்பற்றப்படுகிறது. அதற்குக் காரணம் இங்கு அமைந்திருக்கும் பாடத்திட்டம் அதீத தரம் வாய்ந்ததாகக் கருதப்பட்டதால் இத்தகைய கீர்த்திப் பெற்றிருக்கிறது. தர்மத்தினை நிலை நிறுத்தும் வழிகளைக் கையாள்வதால் சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்டது. அண்டைய தேசங்களின் படையெடுப்பில் இதன் பெயர் இந்து மதமாக மாற்றம் அடைந்தது. 



இந்த மதத்தில் பரமாத்மாவின் பல அவதாரங்கள் நடந்தேறியது .இந்த மதத்தின் பல மகான்களும் ,ஞானிகளும் ,யோகிகளும் , சித்த புருஷர்களும் உருவாகினர்.இங்குத தத்துவங்கள் படைப்பின் தன்மையை மிக எளிமையாக மனிதர்களுக்கு விளக்குகிறது. ஆன்மீகத்தின் நோக்கம் விடுதலை என்பதை உணர்த்தும் விதத்தில் எல்லா கொள்கைகளும் தத்துவங்களும் வாழ்வியல் முறைகளும் உள்ளன.வாழ்வியல் முறையிலேயே மனிதன் விடுதலை அடைய வழிகாட்டும் விதமாய் சாத்திர சம்பிரதாயங்கள் உள்ளன .இங்குப் பல ஞான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.



வேறு மத மார்க்கத்தில் இறைவனை அடைந்த ஞானிகளும் கூட இந்த மதத்தின் கொள்கைகளும் தத்துவங்களும் போற்றப்படுகின்றன.இது அனைத்திலும் சிறந்ததாக இருக்க முக்கியக் காரணம் இது மனித சமுதாயத்தின் தர்மத்தினை நிலைநிறுத்துவதில் முன்னிலையில் உள்ளது.



இந்த மதத்திலும் பல பிரிவுகள் உள்ளன.இந்த பிரிவினைகளும் மனிதனின் அறியாமையயால் வளர்ந்திருக்கிறது.தெய்வத்தை பற்றிய தவறான புரிதலால் இது வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.அணைத்து பிரிவினரும் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கூறிக்கொண்டிருக்குகின்றனர்.



தங்கம் என்ற உலோகத்தைக்கொண்டு வளையல் ,காதணி, மோதிரம், குடம்,குவளை ,சிலை ,தேர் என்று பல வடிவங்களில் ஆபரணங்கள் வருகிறதோ அது போலவே அணைத்து மகான்களும் ஞானிகளும் ஒரே பரம்பொருளைப் பலவிதமாய் வர்ணிக்கின்றனர்.தத்துவங்கள் பல வடிவங்களில் வெவ்வேறாய் இருப்பதன் உண்மைத் தன்மை அறியாமல் வேற்றுமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.



மோட்சம் ,முக்தி ,வீடுபேறு என்ற விடுதலை ஒன்றை மட்டுமே வலியுறுத்தும் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பின்பற்றும் பல மனிதர்களின் மத பற்றால் இதன் உண்மை தன்மைகள் அறியாமல் இந்த மதத்தின் கொள்கைகளை தவறாகப் பயன்படுத்துகிறது . தர்மத்தினை நிலைநிறுத்த இந்த மதத்தின் நோக்கம் காப்பாற்றப்பட அனைவரும் மனதில் மதப்பற்றை துறந்து உண்மைத் தன்மை அறிந்து விழிப்பு நிலை அடைய வேண்டும்.



கடவுளை உணர்வதற்கு நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மனதால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது .ஆனால் இங்கு நாம் கடவுளைப் பற்றிய தவறான அபிப்ராயங்களால் பல மாயத் திரைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.



எல்லையில்லா எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்த்தும் விதமாய் எல்லா உயிரினங்களும் இங்கு வழிப் படப்படுகின்றன .மரம், பூ மலை ,கடல், நதி, பறவை,விலங்கு,கருவிகள் என்று அனைத்தும் கடவுளாய் வழிப்படப்டுகின்றன.பூமியில் தோன்றும் அனைத்திலும் இறைவன் இருப்பை உணர்த்தவே இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன .



இறைவன் ஒருவனே என்பது மட்டுமே எல்லா வேத நூல்களும் புராணங்களும் இதிகாசங்களும்,எல்லா ஞான நூல்களும்,இலக்கிய நூல்களும்,,யோக நூல்களும் உரைக்கின்றது. அப்படியிருக்க ஏன் நாம் இங்குப் பல தெய்வங்களை வழிபட்டு வருகின்றோம்?

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஏன் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன?

இறைவன் ஒருவனே என்றால் ஏன் இறைவன் பல நாமங்களால் அழைக்கப் பெறுகிறான்?



இப்படிக் கேள்விகள் எழும்போது மனிதனால் உண்மைத் தன்மையை உணர முடியும்.இங்கு அதிகமான ஞானிகள் உருவானதற்குக் காரணமே கேள்வி கேட்கும் சுதந்திரம் முழுமையாய்க் கொடுக்கப்பட்டது.இத்தகைய கேள்விகள் வாயிலாக பல கீதைகளும் ,பல ஞான நூல்களும் உருவாகியது.



இந்த கேள்வி முறை ஆங்கிலேய அடிமையால் முற்றிலும் இழநது விட்டது. குழந்தைகள் பேசத் தொடங்கியது இந்த உலகில் பார்க்கும் அனைத்திலும் இப்படிக் கேள்வி கேட்பார்கள். இறைவனைப் பற்றியும் பல   கேள்விகளை எழுப்புவார்கள் . ஆனால் நாம் கேள்வியே தவறு என்ற கேள்விகள் எழுவதையே தடை  செய்துவிடுகிறோம்.உண்மையில் குழந்தைகள் கேட்கும் கேள்வியில் ஆழம் சென்றாலும் படைப்பின் தன்மையை நம்மால் உணர முடியும் .கேள்விகள் எழுவதே மனிதன் விழிப்பு நிலை அடைவதற்கு தான். ஆனால் அந்த கேள்விகள் சரியான விடையை அறியாத போது அதை விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்யபடுகின்றன. அப்படித் தான் இங்கு மதத்தினைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் தவறான புரிதலில் விமர்சனங்கள் எழுகின்றன.



சில மனிதர்கள் இது தான் சரி இதில் கேள்வியே எழ அவசியமேயில்லை என்று அதீத பற்றால் அப்படியே  பின்பற்றுகின்றனர் . ஆனால்  உண்மை தன்மையை அறிய முற்படுவதில்லை.



நாம் ஏதோ ஒன்றை நாம் தெரிந்து வைத்திருப்பதாக இருக்கும் வரை, நம்பிக் கொண்டிருக்கும் வரை அதன் உண்மையை உணர முடியாது.

நாம் ஒன்றும் தெரியாததை அறிந்து கொள்ள முயலும்போது மட்டுமே நம்மால் உண்மையை அறிய முடியும். கடவுளைப் பற்றி ஏதோ தெரிந்ததை வைத்து அந்த விடையை தேடுவதினால் உண்மையை அறிய முடிவதில்லை.



ஆனால் சில மனிதர்கள் கேள்வியின் விடையை அறிய பலவாறு முயல்கின்றனர். எப்போது மனிதன் உண்மை அறிவில் தீவிரமாக இருக்கிறானோ அவனுக்கு நிச்சயம் அந்த உண்மை புலப்படும்.

இத்தகைய மனிதர்களே ஞானிகளாக உருவாகிறார்கள்.



நாம் இதுவரை புரிந்து சேகரித்து வைத்திருக்கும் அறிவை விடுத்து நம் உள்ளே தேடத் தொடங்கினால் நிச்சயம் நம் உள்ளே இருக்கும் படைத்தவன் உண்மையை உணர்த்துவார்.



சரி,இந்த கேள்விக்கான விடைகளைத் தேடி செல்வோம்.



நிலையற்ற பொருள்களான மண் ,கல் இதனைக் கொண்டு தான் ஆலயம் கட்டமைக்கப்படுகின்றது.அந்த ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வத்தின் சக்தியாலே அந்த நிலையற்றப் பொருளால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்தி எழுப்பப்பட்டதாக திகழ்கிறது.



அது போல் நிலையற்ற இந்த உடலின் உள்ளே இயங்கும் இறை சக்தியால் இந்த உடல் சக்தி இயங்குகிறது என்பதனை உணர்த்தும் விதத்திலே இத்தகைய ஆலய அமைப்பின் மூலம் நாம் உணரலாம்.



திருமூலரும் அவரது பாடலில் ஊனுடம்பு ஆலயம் என்று உடலை ஆலயத்தோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.



இங்கு ஏதோ ஒரு உவமைக்காக ஆலயத்தை மனித உடலோடு ஒப்பிடவில்லை. இறை தத்துவத்தின் அடிப்படையிலேயே அப்படி பாடியிருக்கிறார். பூமியை இறைவன் ஐம்பூதங்களால் படைத்தார்.அதே போல் நம் உடல் மூலப்பொருளால் இருப்பவை ஐம்பூதங்கள் ஆகும்.ஆலயங்கள் கட்டுமானத்தில் பல ஆகம விதிகளை பின்பற்றி வருவதற்கு இதுவே முக்கிய காரணம். அதாவது நம் உடலின் அங்கங்கள் எந்த மனித அறிவாலும் படைக்கப்படவில்லை .எல்லா மனிதனுள்ளும் உறுப்புகள் ஒரே மாதிரியான வடிவமைப்பிலும் ஒரே மாதிரியான ஸ்தானத்திலும் நுட்பமான செயல்முறையில் இறைவன் படைத்திருக்கிறார்.நாம் நமக்குள் இறைவனை உணரும் பல ஸ்தலங்களைக் கடந்து செல்ல வேண்டும் .அதை மனிதனுக்கு உணர்த்துவதற்காக ஞானிகளும்,குருக்களும் மனிதனுள் இருப்பது போல் அதே ஸ்தலங்களை கோவிலாக வடிவமைத்தனர். வரும் பக்தனுக்கு ஆத்ம ஞானம் வழங்குவதற்காக.அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆலயங்களிலும் இறைவனை தரிசிக்க பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம் இறைவனை உள்நிலையில் பல்வேறு மார்க்கங்களில் சென்றடைய முடியும் என்பதே ஆகும்.பூமியில் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.மனிதனுள் இயற்கையாக ஒவ்வொரு ஸ்தலங்களிலும் இருக்கும் சக்தியின் தன்மைக்கேற்பவே ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன . ஆனால் மனிதன் யோக நிலையில் உடலையும் மனதையும் கடந்து உயிர் சக்தியில் கவனம் செலுத்த வேண்டும்.அப்போது தான் நமக்குள் இயங்கும் இறைசக்தியை உணர முடியும்.



கல்லில் பல தெய்வ திருஉருவங்களை சிலைகளாக வடிவமைத்துள்ளனர்.தெய்வ சிலைகளை பல உயிரினங்களின் உருவ அமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. பூமியில் தோன்றியுள்ள மனிதன் உட்பட எல்லா உயிரிலும் இறைசக்தி இயங்குவதையே இது உணர்த்துகிறது.



எல்லையில்லாமல் நிறைந்திருக்கும் ஒரே தெய்வம் பல்வேறு அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு பலவேறு உருவங்களில் அருள்புரிந்து கொண்டிருக்கிறது .தெஇவை சிலைகலின் மேல் பற்றுடன் இ ருக்கும் மனிதனால் தனக்குள் இருக்கும் தெய்வத்தை உணரவே முடியாது.பக்தியால் கடவுளை உணர முடியமே தவிர பற்றால் உணர முடியாது . பக்தியும் பற்றும் ஒன்றல்ல. பற்றுதல் மனிதனாக உருவாக்குகிறான் ஆனால் பக்தி மனிதனின் இயல்பு.மனிதன் தன உள்ளே இருக்கும் கடவுளிடம் சரணடையும் போது மட்டுமே பக்தி பிறக்கும்.நிலையில்லாத அந்த உருவத்துடன் மட்டும் இணையாமல் அந்த தெய்வச் சிலையில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு நாம் இணைந்தால் மட்டுமே பக்தி எழும்.



கடவுளை உணர்ந்த மகான்களும் , ஞானிகளும் தங்கள் தவ சக்தியால் ஆலயங்களுக்கும் சிலைகளுக்கும் சக்தியேற்றுகின்றனர் . பல வகையான எந்திரங்களைப் பிரதிஷ்டை செய்து அந்த சக்தி அந்த இடத்திற்குச் செல்லும் மனிதர்களின் இயங்கும் இறை சக்தியோடு இணையும் போது அதிர்வலைகளை எழுகின்றன. விழிக் கண்களால் பார்க்க முடியாத சக்தி மையத்தை அங்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய நுட்பமான செயல்முறைகள் மகான்களின் மெய்ஞ்ஞானத்தால் உருவாகிய விஞ்ஞானமாகும்.எத்தகைய பொருள் இந்த சக்தியைக் கடத்தக் கூடியதாக இருக்கிறதோ அந்த உலோகப் பொருட்களை மட்டுமே வைத்து இவற்றை ஏற்படுத்துகின்றனர்.



மகான்கள் இத்தகைய விஞ்ஞான முறையில் ஆலயங்களையும் தெய்வங்களையும் எழுப்பிச் சக்தி மையத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் இயங்கும் தெய்வ சக்தியை உணர்ந்து தெய்வ நிலையை அடையவே இத்தகைய விஞ்ஞான செயல்முறைகளை உருவாக்கினர். பூமியில் ஜீவிக்கும் மனிதருக்கு மறைமுகமாக ஆத்ம ஞானத்தைக் கற்பிக்கவே இவற்றை உருவாக்கியுள்ளனர்.



ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று தவறாகப் பயன்படுத்தபடுகின்றது.. மனிதன் உள்நிலையில் இருக்கும் தெய்வத்தினை உணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதை  புற சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக ஆசை, சுகங்களைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்.. மனிதனின் அகங்காரம் அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை அறியாமையால் அகங்காரத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது .



தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இன்று ஆலயங்களில் பூஜைகள் நடைபெறும் நிலையை ஏற்படுத்திவிட்டது. மகான்கள் கடுமையான தவ வலிமையால் மனிதர்கள் கர்மத்தினை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவற்றை இன்று கர்ம மூட்டைகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்துவது மனித சமுதாயம் மேலும் கடுமையான சூழ்நிலைய சந்திக்க நேரிடும்.



நாம் அந்த இடங்களுக்குச் சென்று உடல்,மனம்,உணர்ச்சிகளின் மேல் இருக்கும் கவனத்தை விட்டு உள்நிலையில் மௌனமாக அமர்ந்திருக்கும் போது அங்கிருக்கும் சக்தி மையத்தால் நமக்குள் இருக்கும் இறை சக்தி இணையும்போது நமக்குள் ஏற்படும் அதிர்வலையை உணரும் போது நமக்குள் இயங்கும் தெய்வ சக்தியை நம்மால் உணர முடியும். நம்மால் உடலையும் மனதையும் கடந்து செல்ல நம்மால் எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். நாம் ஏதோ பெரிய பெரிய யோகா கலையை எல்லாம் கற்க வேண்டிய அவசியமே இல்லை. எண்ணங்கள் இல்லாத மௌன நிலையில் இருந்தால் போதும் நம்மால் எளிமையாக இயங்கும் சக்தியை உணர முடியும்.



நாம் சக்தி மிகுந்த எந்த புண்ணிய ஸ்தலங்களிலும் செல்லும் போது அந்த இடத்தின் பதிவுகள் நம் உடலில் கிரகிக்கப்படுகிறது ஆனால் நாம் வெளி சூழ்நிலையில் நம் கவனம் இருப்பதால் அதை உணர முடியவில்லை.



இந்த சக்தி பரிமாற்றத்தினை நம் ஐம்புலன்களால் அனுபவம் செய்ய இயலாது,நம் காரண அறிவாலும் புரிந்துக் கொள்ள இயலாது, இது நம் மௌன நிலையில் அனுபவம் மட்டுமே செய்ய முடியும்.



பூஜை என்பது ஏதோ வெளியில் செய்யும் செயல்முறைகளை குறிப்பிடவில்லை . இது உள்நிலையில் மௌனமாக இருப்பதையே குறிக்கிறது.

 


சிவவாக்கியர் என்ற சித்தர் எழுதிய பாடலில் பூஜை என்பதற்கு மிக அழகாக பொருள் கொடுக்கிறார். அதாவது, பூ என்பது ஆத்மாவை குறிக்கிறது என்றும் சை என்ற சொல் அசையாது இருப்பது என்று பொருள் கூறுகிறது.



ஆலயங்களில் கடவுளுக்கு செய்யும் பூஜை  என்பது அங்குள்ள சக்தி மையத்தை அதே நிலையில் வைப்பது.நாம் மின்சாதனங்களை எப்படி சக்தியூட்டுகிறோமோ அதுபோலவே விழிப்புணர்வுள்ள குருவால் பூஜை முறையில் சக்தியூட்ட முடியும் .நாம் உள்நிலையில் கவனம் செலுத்தாமல் வெளியில் பூஜை செய்வதால் நம்மால் விழிப்படையவே முடியாது.


ஆலயங்களில் மட்டும் இல்லை மகான்களின் பிரிந்தாவனங்களிலும், சமாதிகளிலும் கூட இன்று மனிதர்கள் புற சூழ்நிலைக்காக சென்று வருகின்றனர்.இயற்கையின் விதி புரியாமல் எதிர்வினை சக்திகளை சம்பாதித்துக்கொள்கின்றான்.. பலர் நான் ஆலயங்களுள் பூஜை செய்து என் வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை மாறியது என்று நம்புகின்றனர் .உண்மை என்னவெனில் சூழ்நிலையை மட்டும் தான் மாற்றுகிறதே தவிர கடினமான சூழ்நிலைகளில் இருந்து

விடுதலை அடைய முடியாது. சக்கரம் சுழல்வதுப் போல் நாம் புறத்தில் சுழன்றுக் கொண்டு இருக்கின்றோம்.அங்கு இருக்கும் மையப்பகுதியானது சக்கரம் சுழன்றாலும் சுழலாது. அதுப் போலவே தெய்வத்தின் இருப்பிடமான மையப்பகுதியில் நாம் சென்றால் கால சக்கரத்திலிருந்து விடுதலை அடைய முடியும். இயற்கையாகவே இருக்கும் ஈர்ப்பு விசையால் மையப் பகுதியிலிருந்து நம்மை இழுத்துக் கொண்டுதான்   இருக்கிறோம், ஆனால் உள்செல்லமால் வெளியில் சுழலும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம்.நாம் எப்போது புற சூழ்நிலையில் வரும் கடினமான சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு மையத்தை நோக்கி நகர்ந்து மையப் பகுதியைச் சென்றடைந்தால் மட்டுமே நம்மால் விடுதலை அடைய முடியும்.புற சூழ்நிலை 

சுழன்றுக் கொண்டு இருந்தாலும் நாம் அகநிலையில் எல்லா சுகமும் அனுபவிக்க முடியும்.இத்தகைய ஈர்ப்பு விசை மகான்களின் இருப்பிடங்களில் அவர்களின் விழிப்புணர்வு சக்தியால் நாம் நன்றாகவே உணர முடியும்.அந்த தெய்வீக ஸ்தலங்கள் நாம் விழிப்பு நிலை அடையும் வாய்ப்பு அதிகம். ஆனால் மனிதனின் அறியாமையால் இவைகள் தவறாகப் பிரயோகிக்கப்படுகின்றன.



உணர்தல் என்பது புறத்தில் வழிப்படுவதால் அடைய முடியாது.நாம் அகத்தில் இருக்கும் இறைவனை உணர முன்வந்தால் மட்டுமே வெளியில் இருக்கும் கருவிகள் கூட வேலை செய்யும்.



கடவுள் உள் நிலையில் இருப்பதை உணர்த்தும் விதமாக அணைத்து சித்தர்களும் தெளிவாக தங்கள் பாடல்களை குறிப்பிடுகின்றனர்.



நாம் வெளியில் எவ்வளவு தேடி அலைந்தாலும் எத்தனை பூழை செய்தாலும் உள் முகமாக நாம் திரும்பாமல் நம்மால் கடவுளை உணர முடியாது.அவர்கள் பாடலில் குறிப்பிட்ட   பூஜைகள் கூட மானசீகமாக நடக்க வேண்டிய பூஜை என பல இடங்களில் தெளிவாக குறிப்பிடுகின்றனர். 



கடவுள் என்ற வார்த்தையிலே அதன் பொருளை நாம் அறிய முடியும்.உள்ளே கடந்து செல்வது என்பதில் இருந்தே கடவுள் என்ற வார்த்தை உருவாகி இருக்கிறது,



இதற்கு சான்றாய் நாம் எல்லா பக்தி இலக்கியங்களிலும், ஞான நூல்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.அதில் சிலவற்றை நாம் காணலாம்.



திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறள் 3-ல் அன்பால் நினைப்பவர் இதய கமலத்தில் இறைவன் இருக்கும்போது அந்த அன்பர் எல்லா உலகத்திற்கும் மேலான வீட்டில் வாழ்வார் என்று குறிப்பிடுகிறார்.கடவுள் மனிதனின் உள் இருப்பதையே அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"மலர் மிசை ஏவினான் மாண்டி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ் வார். "



அடுத்ததாக பகவத்கீதையில் கிருஷ்ணர் 18 - வது   அத்தியாயத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் “ ஈஸ்வரன் உயிர்களையெல்லாம் உடல் என்னும் யந்திரத்திலேற்றி மாயையால் இயக்கிக்கொண்டு அவர்களின் உள்ளத்தில் இருக்கிறான்" என்று பின்வரும் ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.இங்கு ஈஸ்வரன் என்று கிருஷ்ணர் குறிப்பிடுவது எல்லையற்ற பரமாத்மாவை குறிப்பிடுகிறார்.


"ஸ்வர: ஸர்வ-பூதாநாம் ஹ்ருத் - தேஷே ' ர்ஜுனா திஷ்ஷ்டதி ப்ராமயன்

ஸர்வ - பூதாநி யந்த்ராருஷ்டாநி மாயா "




அவ்வையார் மோட்சத்திற்கு தனக்கு வழிகாட்டிய விநாயக பெருமாளைத்  துதித்து   விநாயகர் அகவலில் பின்வரும் வரிகளைப் பாடுகிறார் .


  எல்லையில்லா ஆனந் தம் அளித் (து)

   அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

   சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

   சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி



இதுப்போல் ஏராளமான சான்றுகள் நாம் படித்த நூல்களிலும் கூட இடம்பெற்றுத்தான் இருக்கின்றது.



நாம் படித்த  பாடல்களிலும் ,நாம் கேட்கும் பக்தி பாடல்களிலும் இறைவனின் தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் நாம் மனதின் வழி பார்த்துக்கொண்டிருப்பதால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது..



இங்கு கடவுளுக்கு பல நாமங்கள் உள்ளன .அந்த நாமங்கள் கூட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.,இது அறியாமல் மனிதர்கள் கடவுளைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே கடவுள் வெவேறு குண தண்மையில்   வெளிப்படும் போது பல நாமங்கள் அழைக்கப்படுகின்றார். பல்வேறு தொழில்களில் ஈடுபடும்போது பல அடையாளங்கள் பெறுவதுப் போலவே செயலுக்கு ஏற்றார் போல் பல நாமங்கள் உடையவராக இருக்கிறார். 



சித்த புருஷர்கள் , யோகிகள் , ரிஷிகள் ,ஞானிகள் என்று மாறுபட்டு அழைக்கப்படுவதன் காரணம் அகத்தில் இறைவனை உணர்ந்து அவர்கள் வெளிப்படுத்திய செயல்களை பொருட்டே அவர்கள் வெவ்வேறு விதங்களில் அழைக்கின்றனர். 



இறைவனின் திருஉருவ வடிவமைப்பின் ஏராளமான தத்துவங்கள் அமைந்திருக்கின்றன.அது மட்டுமின்றி தெய்வத்தின் உருவ சிலை வடிவமைப்பிலும் அவர்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கும் ஆயுதங்கள் ,மலர்கள் ,வாகனங்கள்,பூஜைக்கு உபயோகப் படுத்தப்படும் பொருட்கள் என்று எல்லாவற்றிலும் படைப்பின் இறை தத்துவங்களால் உணர்த்தும் விதத்திலே உருவாக்கப்படுகின்றன. மனிதனுள் சூழ்ந்திருக்கும் மாய திரையால் இந்த உண்மைகளை உணர முடிவதில்லை.அந்த தெய்வ வடிவமைப்பின் இறை தத்துவங்களை மகான்கள் அந்தந்த தெய்வத்திற்கான மந்திரங்கள் வாயிலாக நமக்கு விளக்குகின்றனர்.



உதாரணமாக , ஞான சக்தியாய் தோன்றிய சரஸ்வதி தே வியின் வாகனமாக அன்னப்பறவை அமைந்திருக்கிறது. வேறு எதற்கும் இல்லாத ஒரு சிறப்பான இயல்பு அன்னப் பறவைக்கு இருக்கின்றது. அன்னப் பறவையால் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் திறன் இருக்கின்றது. பாலில் தண்ணீர் கலந்து விட்டால் அதை எளிதில் பிரித்தெடுக்க முடியாது . அதை அன்னப் பறவை சிறப்பாகச் செய்யும்.



து போலவே மனிதனுள் ஞானமும் அஞ்ஞானமும் கலந்திருக்கிறது.

சில அஞ்ஞானங்கள் ஞானத்தின் வடிவில் இருந்துகொண்டு அதை நாம் அன்னைப் பறவை பாலையும் தண்ணீரையும் பிரிப்பதைப் போல் நாம் பிரித்தால் மட்டுமே உண்மையான ஞானத்தை அடைய முடியும் என்பதை உணர்த்தும் விதமாகச் சரஸ்வதி தேவிக்கு அன்னப் பறவை வாகனமாக அமைக்கப்பட்டிருக்கிறது.



பொதுவாக சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை கலையை,இசையைக் குறிப்பதாகவே நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.ஆனால் சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை மனித உடலில் இருக்கும் முதுகுத் தண்டினைக் குறிக்கிறது மனிதனின் முதுகுத் தண்டை போல் நுட்பமாக வீணை கருவி அமைந்திருப்பதை யோக நூல்களிலும் வேத நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ளது .முதுகுத் தண்டின் அடியில் இருக்கும் மனிதனின் உயிர் சக்தி தலையின் மேல் வரை எழச் செய்வதே யோக சாதனையாகும். உள்நிலையில் பூமியில் இருக்கும் உயிர் சக்தியை ஆகாயத்தைக் கடந்து எல்லையில்லாத மோட்ச நிலை அடைய முடியும்.உயிர் சக்தியை வேத ஸ்ருதியால் வீணை மீட்டுவதையே சரஸ்வதி தேவியின் வடிவம் உணர்த்துகிறது.



சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் புத்தகம் வேத நூல்களைக் கற்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும்.அவள் கரங்களில் இருக்கும் பிற ஆயுதங்கள் ஞான மார்க்கத்தில் பிரம்மத்தை அடைய மனதை ஒழுங்குமுறைப்படுத்தி புத்தியைக் கூர்மையாக்குவதற்கு எந்த சாத வதி தேவியின் வெண்மை நிறம் சத்துவ குணத்தையும்,தூய்மையையும் குறிக்கிறது . சத்துவ குணத்தால் மட்டும் ஞானத்தை கிரஹிக்க முடியும்.ஞான மார்க்கத்தில் செல்வோர் எந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது .



சரஸ்வதி தேவிக்காக கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியில் ஒன்பதாவது நாள் சரஸ்வதி தேவிக்கு ஆயுத பூஜை என்று அனைத்து கருவிகளையும் சரஸ்வதியிடம் சமர்ப்பிக்கிறோம்.இதில் மிகப் பெரிய சரணாகத தத்துவம் மறைந்துள்ளதை நாம் அறிவதில்லை. ஞான சக்தியின் அருளால் பெற்ற ஞானத்தையும் , ஞானத்தைப் பெற உபயோகித்த புத்தி ,புத்தியைக் கூர்மையாக்க உதவிய கருவிகள் அனைத்தையும் அவள் பாதங்களில் சமர்ப்பித்து நம் அகங்காரத்தை நிர்வாணமாக்கினாள் விஜயதசமியன்று இறைவனை அடைவதில் வெற்றி பெற இயலும் .



அடுத்ததாக எல்லா தெய்வமும் மகான்களும் தாமரை மலர் வைத்திருப்பது போல் அமைந்திருக்கும்.இது எதைக் குறிக்கிறது என்றால் மனிதன் ஞானமடைந்து சஹஸ்ராரசக்கரத்தில் இருக்கும் தாமரை மலர் மலர வேண்டும் என்பதனையே குறிக்கிறது.



எல்லா தெய்வமும் ஏதோ ஒரு வகையான முத்திரையில் இருப்பது கூட தன பக்தன் எந்த முத்திரை செய்ய வேண்டும் என்று வழிக்காட்டுகின்றனர்.



மனிதன் உள்நிலையில் இறைவனை எப்படி அடைய வேண்டும் என்பதனை விளக்கும் பொருட்டு அந்த தெய்வம் அமைக்கப்பட்டிருக்கின்றது. எல்லையற்ற பரப்ரம்மத்தை எப்படி சென்றடையும் வழிக்காட்டவே உருவ அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.



புராணக் கதைகளில் தேவர்கள் அசுரர்கள் என்று இரு வேறாகக் கூறப்பட்டிருக்கும்.இது மனிதனுக்குள் இருக்கும் தேவ குணம் அசுரர் குணம் இப்படிக் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு தெய்வமும் ஏதோ ஒரு அசுரனை வதம் செய்வதுப் போலவே கதைகள் அமைந்திருக்கும். இது அவர்கள் மனித உருவமாய் அவதரித்த போது எவ்வாறு ஆசைகள், துவேஷங்கள், காமம்,குரோதம்,அகங்காரம் அனைத்தையும் அழித்து ஞானமடைந்து பரபிரம்மத்தை அடைந்ததை வெளிப்படுத்தும் விதமாகவும் நாம் எப்படி அடைய வேண்டும் என்பதற்கு வழிக்கட்டவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.



கடவுள் முருகன் நரகாசுரன் , சிங்கமுகன் , சூரபத்மன் என்ற மூன்று அசுரர்களை அழித்து பின் மலை உச்சியில் சென்று யோக நிலையை அடைந்து பின் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. முருக கடவுளின் உருவ அமைப்பில் அவரது ஞான வேல் என்பது பர ஞானத்தை குறிக்கிறது.அந்த ஞான வேல் கொண்டு ராக,துவேஷம்,அகங்காரம் அழித்து அவர் தெய்வ நிலை அடைந்துள்ளதையே குறிப்பதாய் அமைத்துள்ளனர்.ஆறு தலை படைத்ததாக முருகன் பிறந்து ஒரு முகமாக அவர் மாற்றம் அடைந்தது என்பது ஐந்து தலைகள் ஐம்புலனை குறிக்கிறது. ஆறாவது தலை நெற்றி கண்ணை குறிக்கிறது. முருகரின் ஆறு தலைகளும் ஒன்றாகியது போல் தன் பக்தர்களும் நெற்றிக்கண்ணோடு தன ஐம்புலன்களையும் இணைத்து நெற்றிக் கண்ணின் கட்டுப்பாட்டில் ஐம்புலன்கள் செயல் பட வேண்டும் என்பதனை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.



இவை முருகனை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி தாங்கள் தங்களுக்குள் இருக்கும் அசுரனையும் , அகங்காரத்தையும் அழித்து பிரம்ம ஞானத்தால் விழிப்பு நிலை அடைந்து தெய்வ நிலை அடைய வழி காட்டும் பொருட்டே அனைத்து பக்தர்களும் கடவுளை உணர்த்தும் வழிமுறைகளை கற்றுத்தருவதற்காகவே வடிவமைத்துள்ளனர்.



அதேபோல முடிவில் திருமணம் நடைபெறுவதும் வெளியில் அவருக்கு நடக்கும் திருமணத்தை குறிப்பிடவில்லை .அவர் முருகராக அவதரித்த போது உள்நிலையில் இயங்கும் ஜீவாத்மாவை பரப்பிரம்மத்தோடு இணைந்ததையே திருமண வைபவமாகக் கொண்டாடுகிறார்கள் .



எல்லா கடவுளுக்கும் திருமண  வைபவங்கள் கொண்டாடப்படுகிறது.இது அவர்கள் வெளியில் நடந்தேறும் திருமணத்தைக் குறிக்கவில்லை . அவர்கள்  பரம்பொருளிடம் இருந்து உருவமுள்ள ஜீவனாக அவதரித்து எல்லையற்ற பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கும் விதத்தில் இந்த வைபவங்கள் நடந்தேறுகின்றன.



பெண்ணாய் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பக்தி யோகமும் ஞான யோகத்தின் மூலம் எவ்வாறு பரமாத்ம நிலையை அடைந்ததார் என்பதையே அவரது கதை நமக்கு உணர்த்துகிறது. மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்து அவள் பரமாத்மாவுடன் இணைகிறாள்..இந்த பாவை நோன்பு ஆண்டாள் பிராட்டியின் ஆன்மீக சாதனையை குறிக்கிறது.திருப்பாவை அவளது ஆன்மீக சாதனையை விளக்குகிறது . ஆண்டாள் ஏதோ அக்காரவடிசலும் பொங்கலும் செய்து கண்ணனுக்கு நைவேத்தியம் செய்தார் என்று பொருள்படுத்தி அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.ஆண்டாள் நோன்பு மேற்கொள்ளும் போது எப்படி உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடியிருக்க முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.இங்கு ஆண்டாள் பாலுண்ணோம் , நெய்யுண்டோம் ,அமுதம் செய்தோம் என்று குறிப்பிடுவதெல்லாம் ஞானத்தை பற்றி குறிப்பிடுகிறாள் பாட லின் ஆரம்பத்திலேயே

“ மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாளாம் நீராட போதுவீர்

பாடல்கள் தொடங்கும் போதே ஞானம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் ஞானத்தில் நீராடலாம் என்றே அங்குப் பாடல் தொடங்கப்படுகிறது. ஞானத்தை மையமாக வைத்தே அங்கு ஒவ்வொரு வரியும் அவள் பாடியிருக்கிறாள். ஞானத்தை சுவைத்துக் கொண்டிருப்போருக்கு உடலுக்கான  உணவுப் பெரிதும் தேவைப்படாது.



இதே போல் பல சித்தர்களின் பாடல்களும் பக்திமான்கள் இயற்றிய பாடல்களிலும் வரும் கவித்துவமான வார்த்தைகளை புறத்தேவைகளுக்காகப் பாடப் பட்டதாக தவறாகப் பொருள்படுத்திக்கொண்டிருக்கின்றோம் .நாம் மனதைக் கொண்டு   படிப்பதால் தான் இந்த தவறு நிகழ்கிறது .



இதே போல் ராமாயணத்தில் வரும் சீதா ராமர் திருமணம் கூட இந்த தத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.சிவதனுசை உடைத்து சீதையை கரம்பிடிப்பதாக காட்சி வருகிறது.சிவத்தை அடைய நமது புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞ சக்கரத்தை திறக்க வேண்டும் .ஆக்ஞ சக்கரத்தை உடைத்து சீதையை கரம் பிடிக்கிறார் என்ற தத்துவத்தையே இது குறிக்கிறது..நாம் வெளியில் அவர்கள் செய்த செயல்களை கதையாக பார்க்கும்போது இதன் தத்துவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.நாம் வெளியில் அவர்கள் பின்பற்றுவதை பின்பற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் .நாம் தத்துவத்தை உணர்ந்து பின்பற்றினால் மட்டும் சரியாக அமையும்.



ஒவ்வொரு மனித ஜீவனுள் உடல் ,மனம் , உணர்ச்சிகளை கடந்து இயங்கும் உயிர் சக்தியும் படைப்புக்கு ஆதாரமாக இருக்கும் பரப்ரம்மத்துடன் இணைந்து பேரானந்தத்தை அனுபவம் செய்யவேண்டும்.இதுவே திருமணத்திற்கு இத்தகைய முக்கியத்துவம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.இதுவே சிவசக்தி ஐக்கியம் என்று சொல்லப்படுகின்றது.



திருமணம் என்னும் சொல் ஆண் சக்தியும் பெண் சக்தியும் இணைதலைக் குறிக்கிறது .உடலையும் ,மனதையும் இணைப்பதைச் சொல்லவில்லை.இரு மனங்களை இணைக்கவே முடியாது என்பதே உண்மை.திருமண நிகழ்ச்சியில் சொல்லப்படும் மந்திரங்களும் வாழ்த்துப் பாடல்களிலும் இதுவே இடம்பெற்றிருக்கிறது.எல்லையற்று இருக்கும் பிரபஞ்சத்தைப்  படைக்க ஒரு பெண் சக்தியுடன் இணைந்து படைத்தலை நிகழ்த்திநான் படைத்தவன்,.சிவமாக இருந்த பிரம்மம் சக்தியோடு இணைந்து படைப்பை நிகழ்த்தியதுவே அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் ஆகும் .



அர்த்தநாரீஸ்வரர் ,சிவசக்தி என்ற வார்த்தைகள் மகேஷ்வரன் பார்வதியை குறிக்கவில்லை.எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறிக்கவில்லை.எல்லா உருவமும் சிவமாய் இருக்கும் பரப்ரம்மம் சக்தியோடு இணைந்து படைக்கும்போது  ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.


 

மனிதப பிறவி எடுத்தவன் உள்நிலையில் இந்த அனுபவத்தை அடைந்தே ஆக வேண்டும். புற வாழ்க்கையில் மனிதன் வேறு பாலின சக்தியோடு இணைந்தாலும் இணையாவிட்டாலும் அகத்தில் இது நடைபெற்றே ஆக வேண்டும் என்பதே மனிதப் பிறப்பில் மனிதன் அடைய வேண்டிய சாதனையாகும்.மனிதன் அகத்தில் இது நிகழ்ந்தால் மட்டுமே முழுமை பெற்று புற வாழ்வினை அனுபவிக்க இயலும் .மனிதர்கள் புறவாழ்க்கையில் திருமணம் நடந்தாலும் முழுமை உணர்வை அடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.



எல்லா உருவ தெய்வமும் அந்த எல்லையற்ற பரப்ரம்மத்திடம் இருந்து தான் தோன்றியது.ஆகவே எல்லா தெய்வத்திற்கும் இறைவனாக இருப்பது அந்த எல்லையற்று இருக்கும் பரம்பொருள் ஆகும்.இந்த எல்லையற்று இருக்கும் பரம்பொருளை எந்த எல்லைக்குள்ளும் கொண்டு வரவே முடியாது.எல்லா மத கடவுளுக்கும்  மூல கடவுளாய்  இருப்பது அந்த பரம்பொருளாகும்.



நாம் உருவமுள்ள கடவுள் என நினைத்து கடவுளின் அவதாரங்களையும், கதைகளையும் அறிந்துக்   கொண்டிருக்கும் வரை நம்மால் படைத்தவனின் உண்மை தத்துவங்களை அறிந்து கொள்ள முடியாது.நாம் கதைகளை விடுத்து தத்துவப்  பாடத்திற்கு மாற வேண்டும்.கதைகளை படித்து அவர்கள் வெளியில் செய்த செயல்களை விவாதித்துக் கொண்டிருப்பதாலோ  நமக்கு ஒரு பயனும் இல்லை.நாம் ஆராய வேண்டியது அதிலிருக்கும் தத்துவங்களை மட்டுமே.



நாம் எப்படி குழந்தைகளுக்கு ஒரு கருத்தைச சொல்வதற்கு  கதைகளை வடிவமைத்து அதன் சாரத்தை உள்புகுத்துகிறோமோ அது போலவே இங்கு நமக்குள் தெய்வத்தை எப்படி உணர  வேண்டும் என்பதற்காக அதன் உண்மைக் கதை இங்கு நமக்கு வழிகாட்டப்படுகிறது.



கதைகள் ஏதோ நடக்காததைக் கற்பனையாக உருவாக்கவில்லை .இந்தக் கதைகள் தெய்வத்தை உணர்ந்த ரிஷிகளும் ,குருமார்களும் தங்கள் ஞான திருஷ்டியால் முற்காலங்களில் அவதரித்து தெய்வ நிலையை அடைந்தவர்களை வைத்து இந்தக் கதைகள் படைக்கப்பட்டுள்ளன .பல ஆண்டுகள் யோக நிலையில் இருந்து அனாதியாக இருந்த வேதத்தில் புராணங்களைப் படைத்தார்கள். வேதம் வெளியில் தோன்றியதல்ல அது ரிஷிகள் உள்முகமாக தவத்தால் பிறந்தது,மதம் என்பதற்குள் கொண்டு வராமல் எல்லா மனிதனின் ஆத்ம ஞானத்திற்கான கருவி.எல்லா மனிதர்தலும் தனக்குள் இருக்கும் பேராற்றலோடு தொடர்பு கொண்டால் இநத அமுதத்தை சுவைக்க முடியும்.



இறைவனை உணர மட்டும் தான் முடியுமே  தவிர புரிந்து கொள்ள முடியாது ஆனால்  மாய இருள் விலக ஞானிகளின் ஞான ஒளி அவசியமாகிறது.அந்த ஞான ஒளியை ஏராளமான ஞானிகள் ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.நாம் விழிப்புணர்வடைய அவர்களின் ஒளியில் இனைய வேண்டும் .




ர் ஆசிரியர் மாணவனுக்கு ஒரு பொருளின் செயல்பாட்டிற்கு எப்படி ஒரு ஆய்வுக் கூடத்தில் பல விதமான கருவிகளும்,வரைபடங்களும், வடிவமைப்புகளை உருவாக்கி அந்தந்த மாணவர்களின் திறனிற்கேற்ப ஒரே கருத்தை வெவ்வேறு விதமாக விளக்குவாரோ அது போலவே இங்கு நமது ரிஷிகளும் ,ஞானிகளும் பல்வேறு பாடங்களை விளக்கிக் கொண்டுள்ளனர். ,உவமை உவமேயங்களை வைத்து விளக்க முயல்வது போல் தான் இங்கு தெய்வத்தை உணர்த்துவதற்காக குருமார்கள் உருவாக்கி இருக்கிறார்கள் .உவமை உவமேயங்கள் ஏதோ காரணமில்லாமல் தேர்ந்தெடுக்கப்படவில்லை.



இங்கு எந்த உண்மையையும் மறைத்து வைக்கவே இல்லை .நாம் உடல் ,மனம் என்ற எல்லைக்குள் இருப்பதால் மட்டும் அனைத்தும் மறைந்ததாக இருக்கிறது. நாம் அதைக் கடந்துவிட்டால் எல்லா உண்மையும் புலப்படும்.நாம் புற  வாழ்க்கைக்காக என்று சிந்தித்துக்கொண்டிருப்பதால் தான் உடல் நலனிற்கும்,மன நலனிற்கும் ஏற்படுத்தப்பட்டதாய் மட்டும் தெரிகிறது. மனிதப் பிறவியின் நோக்கம் உணர்ந்தாள் நம்மால் சரியாக பார்க்க முடியும்.

இந்த அமைப்பு ஆலயங்கள் நமக்கு ஆத்ம ஞானமடைய கல்வி நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆலய கோபுரங்களிலும் ,தூண்களிலும் ஏராளமான சிற்பங்கள் உருவாக்கி அதன் மூலம் நமக்கு மறைமுகமாக ஆத்ம ஞானத்தை அருளும் வித்தியாலயங்களே ஆலயங்கள் . பக்தி யோகர்களுக்கு மட்டும் ஆலயங்கள் உருவாக்கப்படவில்லை.கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கீரியா யோகம் அனைத்தும் ஒரே இடத்தில் பயில சிறந்த கருவியாக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆய கலைகளும் பக்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்ற்க்காக ஆலயங்கலில்  ஏற்படுத்தப்பட்டன.

தங்கள் தவ வலிமை மூல வருங்கால மனித சமுதாயம் தெய்வ நிலை அடைய விலை மதிப்பற்ற மனித சமுதாயத்திற்கு அளித்துள்ளனர்.ஆனால் நாமோ நமக்கு அளித்த கருவிகளை தவறாகப் பயன்படுத்துகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு மரவெட்டியாளன் தன்னிடம் இருப்பது தங்க கோடாரி என்று அறியாமல் அதைக் கொண்டு மரம் வெட்டிக் கொண்டிருந்தானாம். அது போல் தான் நாமும் செய்து கொண்டிருக்கின்றோம்.



யாரோ ஒருவர் நம் மத வழிபாட்டுத் தளங்களை சிதைக்கும்போது கொதித்தெழுந்து அவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமும் அறியாமையால் மறைமுகமாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.அவை உருவாக்கப்பட்டதன் நோக்கத்திற்காக எதிர்ப்பதமாய் செய்துகொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்து விழித்தெழ வேண்டும்



மத பற்றால் உறக்கத்தில் இருக்கும் அனைவரும் விழிப்பு நிலை வர முன் வர வேண்டும்.இதுவே அவரவர் தர்மமாகும்.நமக்குள் உருவமற்று இருக்கும் இறைவனை உணர உருவ வழிபாட்டின் தத்துவம் அறிந்து கொண்டு செல்லும்போது இந்த பூமியே தேவலோகமாகும் .



அகத்தில் இருக்கும் இறைவனை உணர நாம் இறைவனைப்பு  புரிந்துகொள்ளவோ,கற்கவோ தேவையே இல்லை .ஆனால் இங்கு நாம் அரைகுறையாகப் புரிந்து வைத்திருக்கிறோம். இதை சரிப்படுத்த நாம் இவற்றை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.



மனிதன் தனக்குள் போட்டு வைத்திருக்கும் மத எல்லையை கடந்தால் எல்லையற்ற இறைவனை அடைய முடியும்.இங்கு மனிதன் வெளியில் மத செயல்முறைகளை துறப்பதை பற்றி சிந்திக்கத் தேவையே இல்லை .நாம் உள்ளநிலையில் நமக்குள் இருக்கும் இறைவனிடம் சரணடைந்து வெளியில் நாம் செய்ய வேண்டியதை அந்த பேராற்றலிடம்  ஒப்படைத்தால் போதும்.உள்நிலையில் நாம் எந்த மதத்தின் செயல்முறைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் . அவருக்கு எந்த ஆசிரியரின் கல்வி முறையில் பின்பற்ற முடிகிறதோ அந்த கல்வி முறையில் முன்னேறி செல்லலாம்.



நாம் கருவியை தவறாக பிரயோகப்படுத்துவதை தான் மாற்ற வேண்டுமே தவிர அந்த கருவியை துறப்பதாலோ எதிர்ப்பதாலோ ஒரு பயனும் இல்லை.இனி புற சுகத்திற்க்காக அங்கு செல்வத்தை நிறுத்தி ஆத்ம ஞானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

அத்தகைய கருவி இல்லாமலே கூட மனிதனால் விழிப்புணர்வை அடைய முடியும் ஆனால் எல்லா மனிதருக்கும் அது சாத்தியமில்லை .பல மனிதர்களுக்கு மாயையிலிருந்து வெளியேறும் உதவிகள் தேவைப்படுகின்றன.



இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் .எல்லா மதத்திலும் அவர்கன் தங்களுக்குள் ஏற்பட்ட தெய்வ நிலை அடைந்ததற்கு ஏற்ப அவர்களுக்காண ஆத்ம ஞானத்தினை வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் . எல்லா மத ஆலயங்களும் ஆத்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இங்கு எது சிறந்தது எது சரி என்று ஆராய்ச்சிக்கோ விவாதத்திற்கோ எந்த விஷயமும் இல்லை .நாம் உண்மை உணர்வதற்கு நமக்கு புரியும் பாட திட்டத்தையும் ஆசிரியரும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.எல்லா உருவாக்கத்திற்கும் காரணமாய் இருப்பது ஒரே பேராற்றலாகும்.எல்லாம் ஒன்றே என்றுணர்ந்து விழிப்புணர்வடைய ஆன்மீக பாற்கடலில் நீந்த வேண்டும் .



சமுத்திரம் இருப்பதை அறியாதவரை மட்டுமே மீன் கிணற்றுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும்.சமுத்திரம் இருப்பதை அறிந்தால் சமுத்திரத்தில் நீந்த அஞ்சுவாமல் அதை அனுபவம் செய்யாமல் இருந்திடாது.அதுபோல் நாமும் அந்த பாற்கடலில் நீந்தி பேரானந்தத்தை அடைய வேண்டும்.



No comments:

Post a Comment