*/ ஆன்மீக பயணம் ~ Shreevidyalayam

ஆன்மீக பயணம்


 ஆன்மீக பயணம்









வலிகளைத் தரும் துயரத்திலிருந்து விடுபட்டு பேரமைதியில் இருந்திருப்பதை உணர்ந்திட!!!
கர்மவினையை உருவாக்கும் உணர்ச்சி மோகத்திலிருந்து விடுபட்டு நிரந்தரமான பேரானந்தமாய் இருந்திருப்பதை உணர்ந்திட!!!
வேற்றுமையை தோற்றுவிக்கும் சிற்றறிவைக் கடந்து எல்லாம் ஒன்றென உணர்த்தும் மெய்ஞானத்தில் என்றென்றும் நிலைத்திட!!!

நிலையில்லாத பாச பிணைப்பிலிருந்து விடுபட்டு உண்மையான அன்பில் திளைத்திட!!!

மனம் என்னும் மாய சிறையிலிருந்து விடுதலைப் பெற்று என்றென்றும் சுதந்திரமான நிலையிலேயே இருந்திருப்பதை அறிந்துணர்ந்திட!!!!

எல்லா பொய்மையிலிருந்து விலகி என்றென்றும் மெய்மையான ஆத்ம சொரூபத்தில் வீற்றிட !!!

அறியாமையில் பிறந்த பிறப்பிறப்பு என்னும் கனவு சுழற்சியிலிருந்து விடுபட்டு என்றென்றும் விழிப்பு நிலையில் விழிப்புணர்வாய் பிரகாசிக்க பயணிப்போம் பயணமில்லாத ஆன்மீக பயணத்தில் !!!

No comments:

Post a Comment