*/ விழித்தெழு மனிதா விழித்தெழு !!! ~ Shreevidyalayam

விழித்தெழு மனிதா விழித்தெழு !!!




 விழிப்புணர்வின் எழுச்சி குரல்  -3













எல்லாம் இறைமயமாயிருக்க

எதை மாற்ற 

ஓடி கொண்டிருக்கிறாய்

மனிதா  ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

இறைசகதியை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 

 


எல்லாம் பேரறிவுமயமாயிருந்திட

எதைச் சீர்திருத்த

போராடி கொண்டிருக்கிறாய்

மனிதா  ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

பேரழிவினை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 



எல்லாம் படைத்திருக்க

எதைப் படைக்க

முயற்சித்து கொண்டிருக்கிறாய் 

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

படைத்தலின் அழகை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 



எல்லாம் செல்வமயமாயிருக்க

இல்லாத  வறுமையை

எப்படி ஒழித்திட 

திட்டமிட்டு கொண்டிருக்கிறாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

செல்வத்தின் உணர்ந்திட

விழித்தெழு மனிதா  !!!

 

 


எல்லாம்  அன்புமயமாயிருக்க

இல்லாத பகைமைகளை அழித்திட 

பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறாய் 

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

உண்மையான அன்பினை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 

 


எல்லாம் பேரானந்தமயமாயிருக்க

எந்த துயரங்களை போக்க

வழி தேடிகொண்டிருக்கிராய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

பேரானந்தத்தினை உணர்ந்திட

விழித்தெழு மனிதா  !!!

 

            


எங்கும் வேற்றுமைகள் இல்லாதிருக்க

எந்த ஒற்றுமைகளை நிலைநிறுத்த

ஒப்பந்தமிட்டு கொண்டிருக்கிறாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

ஒற்றுமையினை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 



எல்லாம் தூய்மையாயிருக்க

எந்த அழுக்குகளை நீக்க 

திட்டமிட்டு கொண்டிருக்கிறாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

தூய்மையை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 

          


எல்லாம் இயற்கையிலிருந்திட

எதை உருவாக்க 

பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கிறாரய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

இயற்கையை உணர்ந்திட

விழித்தெழு மனிதா  !!!




எல்லாம் ஆறோக்கியமயமயிருக்க

எந்த நோயினை தீர்க்க

மருந்தினை கண்டுபிடித்து கொண்டிருக்கின்றாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

ஆரோக்கியத்தினை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 

           


எல்லாம் அழகுமயமாயிருக்க

எதை அழகுபடுத்த

ஒப்பனை செய்துகொண்டிருக்கிறாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

அழகினை  கண்டுணர்ந்திட

விழித்தெழு மனிதா  !!!

 

 


பிரிவினை இல்லாதிருக்க

எதை இணைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறாய்

மனிதா ?

விழித்தெழு மனிதா விழித்தெழு

இணைந்திருப்பதை உணர்ந்திட

விழித்தெழு மனிதா !!!

 

 

 

எல்லாம் சரியாய்நடந்துக்கொண்டிருக்க

எதை ஒழுங்குப்படுத்த

சிந்தித்து கொண்டிருக்கிறாய்

மனிதா ?

 



நம் விழிகளுக்கு புலப்படும் குற்றங்களும்

நம் செவிகளில் ஒலிக்கும்

தவறுகளும்

நமக்குள் மறைந்திருந்த

மாய விதைகளால்

விழுந்த மாய பிம்பங்களே  !!

விழித்தெழு மனிதா விழித்தெழு

மாய பிம்பங்கள் விலகிட

சிற்றறிவைத் துறந்து விழித்தெழு மனிதா !!!

 

 


விழித்தெழு மனிதா விழித்தெழு

ஞான பார்வையில்

மெய் ஞானத்நினை

தரிசிக்க

விழிப்புணர்வாய்

விழித்தெழு மனிதா  !!!

 



விழித்தெழு மனிதா விழித்தெழு

ஞானத்தை அனுபவம் செய்திட

விழிப்புணர்வாய் விழித்தெழு மனிதா !!!


No comments:

Post a Comment