துறவு
தோற்றத்தை மாற்றுவது துறவில்லை
உடைமைகளை இழப்பது துறவில்லை
உறவுகளை பிரிந்திருப்பது துறவில்லை
உடலை அழிப்பது துறவில்லை
இல்லறத்தை விலக்குவது துறவில்லை
பொருளில்லாமல் இருப்பது துறவில்லை
செல்வத்தை நிராகரிப்பதும் துறவில்லை
தனித்திருப்பது துறவில்லை
புற தியாகங்கள் எதுவும் துறவில்லை ;
புறத்தில் துறப்பதெதுவும் துறவில்லை
என்ற உண்மமையைபறிந்து,
அகத்தில்
நான் என்ற அகம்பாவத்தால்
தோன்றிய
எல்லா பொய்மைகளிலிருந்தும்
விலகி
மெய்மையான ஆத்ம
சொருபத்தில் நிலைத்திருப்பதே
துறவியின் துறவாகும் !!!
No comments:
Post a Comment