மரண பயங்கள் மறைந்திட
உடலை நாம்
என்று
நினைக்கும் வரை தான்
மரண பயங்கள்
பானை உடைந்தாலும்
பாவனையில் நிறைந்திருக்கும்
காற்றும் வெற்றிடமும்
ஒன்றுமாகாது
வெளியே நிறைந்திருக்கும்
காற்றோடு கலந்து
என்றும்
நிலைத்திருப்பதுப் போலவே
உடல் அழிந்தாலும்
நாம்
அழிவதில்லை
என்ற உண்மைறிந்து
மரணத்தின்
அறியாமை திரைகளை
விலக்கினால்
மரண பயங்களிலிருந்து
நிரந்தர விடுதலை !!!
No comments:
Post a Comment