கற்பதற்கேற்ற பாதை
மார்க்கம் தெரிந்த
எளிமையான
பாதையில்
எளிமையாக
சென்று
மெய்மையை
கல்லாமல்
போலியான வெற்றி
வாகைசூடியவர்களெல்லாம்
அறிவான
முட்டாள்களே
மார்க்கம் தெரியாத
கடினமான பாதையில்
தடுமாறி சென்று
தோற்றாலும்
கடினமான பாதையில்
எளிமையாக
செல்ல
மெய்ஞானத்தால்
பல எளிமையான
யுத்திகளை
கற்றறிந்தவர்களெல்லாம்
முட்டாளான
ஞானிகளே !!!
No comments:
Post a Comment