வாழ்கையின் மெய்பொருள்
இல்லற வாழ்க்கை
ஆன்மீகமாய்
இருந்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
பொய்மைகளில்லாது
எல்லாம்
மெய்மையாயிருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
தூய்மைப்படுத்த
அவசியமின்றி
எல்லாம்
தூய்மையான ஞானமாய்
இருந்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
வேற்றுமைகளில்லாது
எல்லாம்
ஒன்றினைந்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
தேடுவதற்கு
ஒன்றுமில்லாமல்
எல்லாமுமாய்
எல்லாவற்றிலும்
நிறைந்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
சுதந்திரமாய்
விடுதலையில்
இருந்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
மாய உணர்ச்சிகளில்லாது
விழிப்புணர்வாய்
விழித்திருப்பதை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
வாழ்க்கையே ஆன்மீகம்
ஆன்மீகமே வாழ்க்கை
என்ற
மெய்மையை
உணர்வதற்கே
ஆன்மீகம் !!!
No comments:
Post a Comment