தர்மம்
நல்லவனாக இருப்பதும்
ஒழுக்கமாக வாழ்வதும்
மனிதனின் தர்மமமல்ல
சாஸ்திர சம்பிரதாயங்களை
பின்பற்றுவதும்
கொள்கைகளை கடைப்பிடிப்பது ம்
மனிதனின் தர்மமல்ல
வழிப்பாடுகள் செய்வதும்
அறிவினை வளர்ப்பதும்
மனிதனின் தர்மமல்ல
தான தர்மங்கள்
செய்வதும்
சேவை புரிவதும்
மனிதனின் தர்மமல்ல
வல்லவனாக ஆள்வதம்
நீதியை நிலைநிறுத்துவதும
மனிதனின் தர்மமல்ல
எந்த அறத்தை
காப்பதும்
எந்த நெறியை
போற்றுவதும்
மனிதனின் தர்மமல்ல
யாது செய்யினும்
என்றென்றும்
சுய சொரூபத்தில்
விழித்திருப்பதே
மனிதனின் தர்மமாகும் !!!
No comments:
Post a Comment