*/ யார் குரு ? ~ Shreevidyalayam

யார் குரு ?





யார் குரு? 










அகத்திலிருக்கும்

குருவிடம்

கல்வி கற்க

வழிகாட்டுபவரே

புறத்தில்

தோன்றும்

மெய்மையான

குரு  !!! 


சீடனுள்

மறைந்திருக்கும்

குருவை

கான்பவரே

மெய்மையான

 குரு   !!! 


யாருக்கும்

எதையும்

கற்பிக்க

அவசியமில்லையென்று

உணர்ந்தவரே  

மெய்மையான

குரு   !!! 


யாவரும்

சமமான  ஞானமாய்

பிரகாசிப்பதை

காண்பவரே

மெய்மையான

 குரு   !!! 


வார்த்தைகளற்ற

மௌனத்தில்

கற்பிப்பவரே

மெய்மையான

குரு   !!!!


இருமைகளில்லாது

விழிப்புணர்வாய்

ஒன்றினைந்திருப்பதை

உணர்ந்திருப்பவரே  

மெய்மையான

குரு  !!!


இருளில் நிறைந்திருக்கும்

ஞானத்தை

படிக்க

பார்வையளிப்பவரே

மெய்மையான

குரு   !!!

1 comment: