ஆசை
ஆசைகளும் எண்ணங்களும்
அகற்ற அகற்ற
புதிதாய் துளிர்க்கும்
விருட்சத்தின்
கிளைகளும் இலைகளும்
வெட்ட வெட்ட
வளர்வது போல்
நிலத்தில் ஊன்றியிருக்கும்
வேரினை அகற்றி
விருட்சத்தை
முழுமையாய்
அகற்றுவது போல்
மனதில்
ஊன்றியிருக்கும்
அகங்காரத்தை
அழித்தால்
ஆசைகளையும் எண்ணங்களும்
இல்லாமல் போவது
சாத்தியமாகும் !!!
No comments:
Post a Comment