மருந்தில்லா மருத்துவம்
இருளின் கருமையில்
நிறைந்திருக்கும்
மெய்ஞானத்தை
வாசிப்பதே
பார்வையற்றவனுக்கு
மருந்து
நிசப்தத்தில்
நிறைந்திருக்கும்
பேரமைதியின் இசையை
கேட்பதே
செவியிழந்தவனுக்கு
மருந்து
மௌனத்தில்
நிறைந்திருக்கும்
ஞானத்தோடு
மௌன மொழியில்
பேசுவதே
பேச்சிழந்ததவனுக்கு
மருந்து
உடலின் வலிகளை
கடந்து
நிறைந்திருக்கும்
பேரன்பினை
கவனித்திருப்பதே
உடல் நோய்க்கான
மருந்து
உணர்ச்சிகளுக்கிடையில்
மறைந்திருக்கும்
பேரானந்தத்தை
உணர்ந்திருப்பதே
மன நோயாளிக்கு
மருந்து
இல்லாத குறைகளையும்
இல்லாத நோயையும்
இருப்பதாய்
காட்சிபடுத்தும்
மனதிற்கு
அசையாது
இயங்கும்
பேராற்றலின்
பலத்தினையுனர்ந்து
விழிந்தெழுவதே
மருந்து !!!
👏👏👏
ReplyDelete😊😊😊
Delete