மெய்மையின் காதல் மொழி
தோட்டத்தில்
பூத்துக்குலுங்கும்
பூக்களெல்லாம்
நீயும் நானும்
ஒன்றென
காதலில்
புன்னகைத்திட
வானத்தில்
மலர்ந்திருக்கும்
பௌர்ணமி நிலவும்
நீயும் நானும்
ஒன்றென
காதலில்
கண் சிமிட்டிட
கடல்
அலையலையாக
துள்ளியெழுந்து
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
அணைத்திட
சுடும் வெயிலும்
கதிரொளியாய்
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
அன்புகதிர்கள்
வீசிட
மாலை தென்றலும்
பூங்காற்றாய்
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
அரவணைத்திட
கிளியும் குயிலும்
கொஞ்சலாய்
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
இன்னிசை
பாடிட
உறவுகளும்
நட்பும்
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
ராகங்கள்
இசைத்திட
ஆலயத்தில்
வீற்றிருக்கும் தெய்வமும்
நீயும் நானும்
ஒன்றென
காதலாய்
அருள்மழை
பொழிந்திட
பிரபஞ்சமும்
எல்லா உயிர்களும்
நீயும் நானும்
ஒன்றென
மௌனமாய்
காதல் வசனங்கள்
பேசிட
மெய்மையான
காதலின்
மௌன பாஷைகள்
உணராது
அறிவு மயக்கத்தில்
மனதில்
சிறைபப்ட்டிருக்கிறான்
இல்லாத
நானென்ற
அகந்தையில்
மனிதனாக !!!
No comments:
Post a Comment